இந்திரா காந்தி நினைவுநாள்.
இந்தியாவின் புனித நதிகளில் ஒன்றான யமுனை நதி, கங்கையில் சங்கமிக்கும் அலகாபாத் நகரில், இந்தியாவின் நெஞ்சுரமிக்க வீரத்திருமகள் இந்திரா காந்தி நேரு, கமலா தம்பதியருக்கு மகளாக 1917 நவம்பர் 19-ந் தேதி பிறந்தார்.
பள்ளி படிப்பு, கல்லூரி படிப்பு முடித்து இளம் வயதிலேயே இந்திய விடுதலை போராட்டத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு சிறை சென்றவர்.
விடுதலை போராட்டத்தில் சிறையில் இருந்த ஜவஹர்லால் நேரு, சிறுமி இந்திராவுக்கு இந்தியாவின் பன்முகத் தன்மையையும், உலக வரலாற்றையும் கடிதங்கள் மூலமாக போதித்தார்.
இதன்மூலம் இந்திராவை இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராக விளங்குவதற்கு அடித்தளம் அமைத்தவர் நேரு.
இந்தியாவின் பிரதமராக ஜவஹர்லால் நேரு பதவி வகித்த 17 ஆண்டுகாலம் அவருக்கு உதவியாக செயல்பட்டவர் இந்திரா காந்தி.
அவர் வெளிநாடு செல்கிறபோதெல்லாம் உடன் சென்றவர். இதன்மூலம் உலகத் தலைவர்களின் தொடர்பு அவருக்கு ஏற்பட்டது.
அதே நேரத்தில் காங்கிரஸ் கட்சியில் மிகுந்த ஈடுபாட்டுடன் செயல்பட்டார்.
ஒருமுறை அகில இந்திய காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகித்தார்.
ஜவஹர்லால் நேரு மறைவிற்கு பிறகு அவரது விருப்பப்படி இந்தியாவின் பிரதமராக பெருந்தலைவர் காமராஜரின் பரிந்துரையின் பேரில் லால்பகதூர் சாஸ்திரி பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
ஆனால், அவர் குறுகிய காலத்தில் மரணம் அடைந்தார்.
அதைத் தொடர்ந்து இந்தியாவின் பிரதமராக எவரை தேர்வு செய்வது என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாக எழுந்தது.
அப்பொழுது அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்த காமராஜர், இந்தியாவை வழிநடத்தக்கூடிய ஆற்றலும், திறமையும் இந்திரா காந்திக்கு இருப்பதை உணர்ந்தார். அதையொட்டி அவரை பிரதமராக்க பலரது ஆதரவுடன் அவர் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெற்றது.
இதையொட்டி இந்தியாவின் பிரதமராக இந்திரா காந்தி தேர்வு செய்யப்பட்டார்.
தொடர்ந்து 11 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமர் பதவியை அலங்கரித்தார்
1984 அக்டோபர் 31-ந் தேதி ஒரு தொலைக்காட்சிக்கு பேட்டி கொடுப்பதற்காக பிரதமர் இந்திரா தமது வீட்டு தோட்டத்திற்கு வந்தபோது அவரது காவலர்களால் அவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Comments
Post a Comment