பழமொழிகளும் அதன் அர்த்தங்களும் !
1.) ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். பொருள்: மற்றவர்கள் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் உன் குழந்தை தானே வளர்ந்து விடும். உண்மையான பொருள்: ஊரான் வீட்டு பிள்ளையாகிய உன் கர்ப்பிணி மனைவியை பாசத்துடன் ஊட்டி வளர்த்தால், அவள் வயற்றில் இருக்கும் உன் குழந்தையும், ஆரோக்கியமாக தானே வளரும் என்பதே உண்மையான பொருள். 2.) கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை. பொருள்: கழுதைக்கு கற்பூர வாசம் தெரியாது. உண்மையான பொருள்: 'கழு தைக்க தெரியுமாம் கற்பூர வாசனை'. கழு என்பது ஒரு வகை கோரைப்புல். அதில் பாய் தைத்து படுத்து பார்த்தால் கற்பூர வாசனை தெரியும் என்பதே சரியான விளக்கம். 3.) ஆயிரம் பேரை கொன்றவன் அரை வைத்தியன் ஆவான். பொருள்: ஆயிரம் மக்களை (நோயாளிகளை) கொன்றவன் பாதி வைத்தியன். உண்மையான பொருள்: ஆயிரம் வேரை கொண்டவன் அரை வைத்தியன் ஆவான். நோயை போக்க ஆயிரம் வேரை கொண்டு மருந்து கொடுப்பவன் அரை வைத்தியன் ஆவான். 4.) களவும் கற்று மற. பொருள்: தீய பழக்கமான களவு (திருட்டை) நாம் கற்று கொண்டு, மறந்து விட வேண்டும் உண்மையான பொருள்: களவும், கத்தும் மற. களவு – திருடுதல்; ...